நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! ஸ்டாலின் விமர்சனம்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பித்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.இந்த ஆண்டு 56.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட 0.2% அதிகமான தேர்ச்சி விகிதம் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், பல்வேறு இடங்களில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக குஜராத்தை மாநிலத்தில் மாணவர்களின் கேள்வித்தாளில் பதிலை எழுதித்தருவதாக கூறி 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். இதில் பலகோடி வரை பணம் கைமாறியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதைக்குறிப்பிட்ட தமிழக முதல்வர் சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வுக்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும் என தனது X பக்கத்தில் விமர்சித்துள்ளார்.