Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? 

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவருடைய மனைவி பொற்கொடி அவர்களுக்கு மாநில...
HomePoliticsபடுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? 

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? 

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா?
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவருடைய மனைவி பொற்கொடி அவர்களுக்கு மாநில பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்பதையும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய படுகொலைக்கு காரணமான நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் ஒவ்வொரு நபராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் தலைமையில் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று சமீபத்தில் பேரணி நடத்தப்பட்டது. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மனைவிக்கு மாநில பதவியை அளித்துள்ளது பகுஜன். சமாஜ்வாதி கட்சி.
சென்னையில் இன்று(ஜூலை22) பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மனைவி பொற்கொடி அவர்களுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கலாம் என்று கட்சி ஒரு மனதாக முடிவு எடுத்ததாக தெரிகின்றது.
இதையடுத்து பொற்கொடி அவர்கள் மாநிலத் தலைவர் பதவியை மறுத்துள்ளார். இதையடுத்து பொற்கொடி அவர்களுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
பொற்கொடி அவர்கள் மாநிலத் தலைவர் பதவியை மறுத்ததால் அடுத்த மாநிலத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மறைந்த ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுடன் இணைந்து 2006ம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்த டாக்டர் ஆனந்தன் அவர்கள் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் அடுத்த மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.