சீமான் மீது இரண்டு வழக்குகள் பதிவு! தப்பிக்கவே முடியாது போலவே!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் சிக்கலில் சீமான் அவர்கள் மாட்டியுள்ளதாக தெரிகின்றது.
இந்த புகார்களுக்கு முதல் காரணம் சீமான். அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களை பற்றி பேசியது தான். அதாவது சீமான் அவர்களிடம் நீங்கள் ஏன் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை இழிவு படுத்தி பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சீமான் அவர்கள் “ஜெயலலிதா அவர்கள் இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிகளுக்கு நடுவில் படுத்திருந்தால் நடுவுல படுத்திருக்கிறார் என்றுதான் கூற முடியும். அதை தப்பு என்று கூறினால் ஜெயலலிதா அவர்கள் இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிகளுக்கு நடுவே சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார் என்று கூறலாம்” என்று சர்ச்சைக்குரிய ஒரு பதில் கொடுத்தார்.
சீமான் அவர்களின் இந்த பதில் அதிமுக கட்சியினர் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமான் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்த அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் அவர்களை அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக சீமான் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் கொடுத்துவிட்டார்.
இதே போல சீமான் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பற்றியும் அவதூறாக பேசியது திமுக கட்சியினரையும் வெறுப்படையச் செய்துள்ளது. அதாவது சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி தருவதாக சீமான் அவர்கள் கூறினார்.
சாட்டை துரைமுருகன் அவர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் பொழுது நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்பொழுது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பற்றியும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களை பற்றியும் அவதூறாக பேசி பாடல் ஒன்றை பாடினார். மேலும் கடுமையான சொற்களால் சாட்டை துரைமுருகன் அவர்கள் திமுக கட்சியை பற்றி விமர்சனம் செய்தார். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு எதிராக திமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு சாட்டை துரைமுருகன் அவர்கள் வந்த பொழுது காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து சாட்டை துரைமுருகன் அவர்கள் இன்று(ஜூலை17) ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து சீமான் அவர்கள் கலைஞரை பற்றி இழிவாக பாடல் பாடிய சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி தருகிறார்கள். பாட்டு பாடினால் குற்றமா. பாட்டு பாடினால் கைது செய்வார்களா? அதே பாட்டை நான் பாடுகிறேன். என்னை வந்து கைது செய்து பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
சீமான் அவர்களின் இந்த பேச்சு திமுக கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தலைவர் கருணாநிதி அவர்களை பற்றி இழிவாக பேசிய சீமான் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று திமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனராம். மேலும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூட இது பற்றி அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.